பொறு - Poru
			VI. v. t. bear, sustain, சகி; 2. bear with, have patience; 3. suffer, tolerate, endure, தாங்கிக்கொள்; 4. overlook, forgive, மன்னி; 5. take a responsibility, உத்தரவாதமாகு; v. i. wait, stay, stop, நில்; 2. run aground, தட்டிபோ; 3. come upon or devolve (as duty), சுமரு; 4. become fixed or wedged in, மாட்டிக்கொள்; 5. cost as an article, be spent or expended on; 6. behave, இணங்கி யிரு.
			
								சற்றுப் பொறு, wait a little.				இது இவனைப்பொறுத்த காரியம், this devolved on him.				எனக்குப் பொறுக்காது, I cannot put up with it.				முடிபொறுத்த ராசா, a crowned king.				பொறுத்தார் பூமிஆள்வார், the patient will govern the earth.				பொறாதவன், one that cannot bear an injury or an affliction; one who is not worth anything.				தலைபொறாதவன், one that cannot carry a burden on his head.				பொறுத்த சமுசாரம், a large burdensome family.				பொறுத்தல், v. n. forbearing; enduring.				பொறுத்துக்கொள்ள, to forgive, to bear patiently.				பொறுப்பு, v. n. patience toleration, sufferance; 2. heaviness, weight, charge, responsiblity; 3. prop, support.				பொறுப்பற்றதனம், indifference to a trust; 2. envy.				பொறுப்பற்றவன், an impatient man; 2. one destitute of help.				பொறுப்பாளி, a responsible person.				பொறுப்புக்கட்ட, -வைக்க, to put responsibility on one, to hold one responsible.
						
			விசை - Visai
			s. spring, elasticity, force; 2. swiftness, haste, speed, துரிதம்; 3. spring-trap, பொறி; 4. any mechanical instrument as a lever, மிண்டி; 5. change, turn, தரம்; 6. a stay, a prop.
			
								விசைவைத்துத் தூக்க, to lift up with a lever.				என்பேரில் விசை வைத்துக்கொண்டிருக் கிறான், he has laid a trap for me.				விசை வைத்துத் தட்டினாற்போலே காரியத்தைத் தட்டிப்போட்டான், he has over set the project.				விசையைத் தட்ட, to spring a trap, to fall into difficulty.				விசை தப்பிப்போயிற்று, the contrivance has miscarried.				வில்லை விசையேற்ற, to strain a bow.				விசையாய், fast, vehemently.				விசையாய் அடிக்க, to strike rapidly.				விசையாய்ப் போனான், he went away in haste.				இந்த விசை, this time.				எத்தனை விசை, how often?				ஒருவிசை, once.				இன்னும் ஒருவிசை, once more.
						
			கூளம் - Kuulam
			s. rubbish of straw, hemp etc. chaff, குப்பை; 2. sediment, dregs, திப்பி.
			
								குப்பையும் கூளமும், sweepings and chips.				கூளத்தைத் தூற்றிப்போட, to winnow the chaff.				கூளம்போட்டுத் தட்டின எருமுட்டை, fuel made of cowdung mixed with chaff etc.				கூளன், a worthless person.
			From Digital DictionariesMore