பச்சை - Passai
			s. greenness, rawness, unripeness, tenderness, 
பசுமை; 2. an emerald, 
மரகதம்; 3. ribaldry, vulgar language; 4. Vishnu; 5. Mercury, the 
 planet; 6. (prov.) present to a friend or to a married pair, உலுப்பை. 
			
								பச்சை குத்த, to tattoo.				பச்சைபாடி, a present of vegetables.
						
			பசுமை - Pasumai
			s. greenness, rawness, பச்சை; 2. coolness, குளிர்ச்சி; 3. truth, reality, honesty, உண்மை; 4. prosperity, செல்வம்; 5. Cashmere shawl; 6. essence, the essential part of a thing, சாரம். Note:- the adj. forms are பசு (with ம் etc.), பசிய, பச்சு, பச்சை, பாசு, பை (with ம் etc. The last three see separately.
			
								பசியமரம், a green tree.				பசுங்கதிர், young ears of corn.				பசுங்காய், a green unripe fruit.				பசுங்கிளி, பைங்கிளி, a green parrot.				பசுங்குடி, பசுமைக்குடி, a respectable family.				பசுந்தரை, a grassy ground.				பசுமைக்காரன், a man of truth and probity.				பசுமையுள்ளவன், பசையுள்ளவன், a man in good circumstances.				பசும்புல், green grass; 2. growing corn, விளைபயிர்.				பசும்பொன், fine gold, gold of a greenish yellow colour as distinquished from செம்பொன்.				பச்சடி, a kind of seasoning for food, 2. (prov.) prosperity, command of money.				பச்சரிசி, raw rice freed from the husk.				பச்சிலை, a green leaf; 2. a kind of ever-green, xanthocymus pictoricus,  தமாலம்.				பச்சிலைப்பாம்பு, a kind of green snake.				பச்சிறைச்சி, raw meat.				பச்செனல், பச்சென்றிருத்தல், v. n. being green, verdant.				பச்செனவு, v. n. greenness, verdure; 2. dampness; 3. plumpness, fulness.				பச்செனவான மரம், a verdant tree.				பச்சோந்தி, பச்சோணான், the green lizard. the chameleon.				பச்சோலை, a green palm leaf.
						
			கருமை - 
			s. blackness, black colour, 
கறுப்பு; 2. greatness, excellence, 
பெருமை; 3. strength, 
வலி; 4. freshness, 
பசுமை; 5. severity, cruelty, 
கொடுமை.                                                 
 
			
								கரிய, கரு, adj. black (கார் see separately).				கரியது, it is black, that which is black.				கரியபோளம், aloe.				கரியவன், கரியன், கரியான், a black or darkman; 2. a deceitful man as in "கரியார் சொல்தேறான்" (ஏலாதி)				கருங்கடல், black sea.				கருங்கல், black stone, granite.				கருங்காலி, black wood, ebony.				கருங்கிரந்தி, black eruptions in infants.				கருங்குங்கிலியம், black resin for pitch.				கருங்குரங்கு, a black monkey.				கரிங்குவளை, blue water lily.				கருங்குறுவை, a dark kind of paddy.				கருங்கொல், iron.				கருங்கொல்லர், blacksmiths.				கருங்கோழி, a fowl with black flesh.				கருநாள், an inauspicious day.				கரு (கரி) நிலம், black soil.				கருப்பன், a dark -- complexioned man.				கருமணல், black sand.				கருமணி, the pupil of the eye.				கருமருந்து, gun-powder.				கருமுகில், --மேகம், a dark-cloud.				கருமுதல், a kind of sea-fish.				கருமுரடன், an obstinate person.				கரும்பாம்பு, a black serpant, the 8th planet, இராகு.				கரும்பித்தம், black bile, madness.				கரும்பூ, pontederia, நீலோத்பலம்.				கருந்தாது கரும்பொன், iron.				கருந்தனம், gold, treasure.				கருவங்கம், black lead.				கருவாலி, the oak tree, a bird.				கருவாழை, dark red plantain.				கருவிழி, the iris of the eye.				கருவினை, a sin.				கருவேம்பு, --வேப்பிலை மரம், a tree whose fragrant leaves are used in curries; curry leaf tree; black Neem tree, garuga puinata.				கருவேல், a tree, acacia Arabica.				கருவேலம் பிசின், gum of the கருவேல்.
			From Digital DictionariesMore